பல ஆண்டுகளில் முதல் முறையாக நாட்டிற்குள் அனுமதிக்கப்படும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை கனடா கடுமையாகக் குறைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது ஆட்சியில் தொடர்ந்தும் இருக்க முயற்சிக்கும் அரசாங்கத்தின் கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடா 2024 இல் 485,000ஆக உள்ள நிரந்தர புலம்பெயர்வோர் எண்ணிக் கையை 2025 இல் 395,000 ஆக குறைக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், அந்த எண்ணிக்கை 2026இல் 380,000 ஆகவும் 2027 இல் 365,000 ஆகவும் குறைக்கும் என்று அந்த நாட்டின் அரசாங்க தரப்பை கோடிட்டு ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில், தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை 2025 இல் சுமார் 30,000 ஆக குறைக் கப்பட்டு 300,000 ஆக இருக்கும் என்றும் அந்த தரப்பு குறிப்பிட்டுள்ளது.