மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் விடுதலை

7 months ago

மட்டக்களப்பு - மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரையில் இடம்பெற்றுவரும் சிங்கள ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மாதவனைப் பகுதியில் இடம்பெற்றுவரும் நில ஆக்கிரமிப்புக்கு எதிராகவும், கால்நடைகள் வெடிவைத்துக் கொல்லப்படுகின்றமைக்கு எதிராகவும் கடந்த வருடம் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து போராட்டமொன்றை நடத்தியிருந்தனர்.

இதையடுத்து பொலிஸாரால் ஆறு மாணவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு ஏறாவூர் நீதிமன்றத்தில் நேற்று(03) விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது பொலிஸார் போதிய சாட்சியங்களை முன்வைக்கத் தவறியமை, குற்றப் பத்திரிகையில் காணப்பட்ட முரண்பாடுகள் என்பன காரணமாக, வழக்கைக் கொண்டுநடத்த முகாந்தரங்கள் இல்லை என்றும் இதனால் மாணவர்கள் விடுவிக்கப்படுகின்றனர் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.


அண்மைய பதிவுகள்