வவுனியா - நெளுக்குளம் 4ம் கட்டை பகுதியில் 128 கிலோ மாட்டிறைச்சியுடன் வந்த வாகனத்துடன் இருவர் கைது

2 months ago



வவுனியா - நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 4ம் கட்டை பகுதியில் 128 கிலோ மாட்டிறைச்சியுடன் வாகனம் ஒன்றினை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் இருவரை கைது செய்துள்ளனர்.

நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி. எம்.பி.ஆர்.கே திவுல்வெவ தலைமையிலான பொலிஸ் குழுவினர் நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் திடீர்ச் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது பட்டா ரக வாகனத்தை சோதனைக்குட்படுத்திய போது கொள்கலன்களில் 128 கிலோ மாட்டிறைச்சியை முறையற்ற முறையில் கொண்டு சென்றமைக்காக வாகனத்தை கையப்படுத்தியதுடன் சாரதி உட்பட இருவரை பொலிஸார் கைது செய்தனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர், கையகப்படுத்தப்பட்ட 128 கிலோ மாட்டிறைச்சி, பட்டா ரக வாகனம் என்பவற்றுடன் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.



அண்மைய பதிவுகள்