பெப்ரவரி 4 ஆம் திகதி கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம்.-- வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் தெரிவிப்பு

2 months ago



எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி கிளிநொச்சியில் மாபெரும் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

உறவுகளின் போராட்டம் நீர்த்து விடக்கூடாது என்பதற்காக போராட்டத்தை தாங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்வோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு மாவட்ட சங்கத்தின் நிர்வாகத் தெரிவின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தனர்.

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினரின் புதிய நிர்வாகத் தெரிவு நேற்று இடம்பெற்றது.