இலங்கையில் கலாசாரத்தை அழிக்கும் திட்டங்களுக்கு யு.எஸ்.எய்ட் நிறுவனம் 7.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிட்டுள்ளது -- விமல் வீரவன்ஸ குற்றச்சாட்டு

இலங்கையில் கலாசாரத்தை அழித்து மக்கள் தொகையைக் குறைக்க வடிவமைக்கப்பட்ட திட்டங்களுக்கு யு.எஸ்.எய்ட் நிறுவனம் 7.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ குற்றம் சுமத்தியுள்ளார்.
எலான் மஸ்க்கின் கூற்றுப் படி, இலங்கை திட்டங்களுக்கு யு.எஸ்.எய்ட் 7.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளது.
இது, 2400 மில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமானதாகும் என்று அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக இளைஞர்களிடையே பாலின மாற்றத்தை ஊக்குவிக்கவும் இறுதியில் மக்கள் தொகையைக் குறைக்கவும் திட்டங்களை யு.எஸ். எய்ட் வடிவமைத்ததாக வீர வன்ஸ குற்றம் சுமத்தியுள்ளார்.
உலகம் அதிக மக்கள் தொகை கொண்டது என்றும், எனவே நோய்களை உருவாக்குவதன் மூலம் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பில் கேட்ஸ் ஒருமுறை கூறினார்.
நோய்களைக் குணப்படுத்த, தடுப்பூசிகள் தேவை என்ற வகையில் அந்த செயல் வணிகங்களையும் மேம்படுத்துவதற்கான ஒரு சதி என்றும் விமல் வீரவன்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
