யாழ்.பருத்தித்துறையில் கிணற்றில் தவறி விழுந்து 3 வயது ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
4 months ago

கிணற்றில் தவறி விழுந்த மூன்று வயது ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் யாழ்.பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட திருமாள்புரம், வல்லிபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இன்று (05) நண்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில் அதே பிரதேசத்தைச் சேர்ந்த ரஜிவன் சுஜித் என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.
குழந்தை கிணற்றில் விழுந்த நிலையில் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போது குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
சடலம் மரண விசாரணைக்காகவும் பிரேத பரிசோதனைக்காகவும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
