கனடாவின் முன்னணி விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான வெஸ்ட் ஜெட் விமான சேவை நிறுவனத்தின் பணியாளர்கள், பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க உள்ளனர்.
விமான சேவை நிறுவனத்தின் பராமரிப்பு பணியாளர்களே இவ்வாறு இன்றைய தினம் தொழிற்சங்க போராட்டத்தில் குதிக்க உள்ளனர்.
இதன் காரணமாக வெஸ்ட் ஜெட் விமான சேவை நிறுவனம் சுமார் 40 விமான பயணங்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
இந்த விமான பயணங்கள் ரத்து செய்த காரணத்தினால் சுமார் 6,500 பயணிகள் பாதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தொழிற் சங்கம் எடுத்த கோரிக்கைகளுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை, அதன் காரணமாக போராட்டத்தில் குதிப்பதாக பணியாளர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது