பாராளுமன்றத் தேர்தலிலும் பொது கட்டமைப்பினூடாக களமிறங்கு வோம் - எம்.பி செல்வம் அடைக்கலநாதன் தெரிவிப்பு.
அரியநேத்திரன் பெற்ற வாக்குகள் தமிழர்களின் ஒற்றுமையை பறைசாற்றும் வெற்றி. அத்துடன், பாராளுமன்றத் தேர்தலிலும் பொது கட்டமைப்பினூடாக களமிறங்கு வோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானதைத் தொடர்ந்து அவர் கருத்து வெளியிட்டபோதே மேற்கணடவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் திரட்சியையும் ஓர் அணி யில் தமிழ் மக்கள் திரள வேண்டும் என்ற ஒரு நற்செய்தியையும் வெளிப்படுத்துவதற்கான ஒரு பலப்பரீட்சை எமது தேசத்தில் இடம்பெற்றது.
இதற்குத் தமிழ் மக்கள் தங்களின் ஆதரவைத் தெரிவித்திருக்கின்றார்கள்.
அவருக்குக் கிடைத்த 2 இலட்சத்து 25 ஆயிரம் வாக்குகள் என்பதை வெற்றியின் முதற்படியாகவே கருதுகிறோம்.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலி லும் இந்தப் பொதுக் கட்டமைப்பின் ஊடாகவே நாம் தேர்தலை சந்திப் போம்.
இது மக்களின் ஒரு திரட்சியான வெளிப்பாடாக இருக்கும் என்பதோடு ஒற்றுமையை விரும்பாத கட்சிகளை மக்கள் புறக்கணிப்பார்கள் என்பதையும் பாராளுமன்றத் தேர்தல் வெளிப்படுத்தும் - என்றார்.