பருத்தித்துறை, புலோலி காட்டுப் பகுதியில் மறைத்து வைத்திருந்த போதைப்பொருள்கள் ஒருதொகை நேற்றுமுன்தினம் புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளன. இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அவை மீட்கப்பட்டன.
இதன்போது ஒரு கிலோ கேரளக் கஞ்சா, 290 போதை மத்திரைகள் மற்றும் தராசு ஒன்று என்பன மீட்கப்பட்டன. சந்தேகநபர் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
