வடக்கு, கிழக்கில் 14 லட்சத்து 70 ஆயிரத்து 549 பேர் வாக்களித்த நிலையில் 7,49,762 பேர் வாக்களிக்காததுடன் 94,489 வாக்குகள் நிராகரிப்பு
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 221 லட்சத்து 20 ஆயிரத்து 311 வாக்காளர்களைக் கொண்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 14 லட்சத்து 70 ஆயிரத்து 549 பேர் வாக்களித்த நிலையில் 7,49,762 பேர் வாக்களிக்காததுடன் 94,489 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன .
வடக்கு மாகாணத்தில் யாழ். - கிளிநொச்சி தேர்தல் மாவட்டம் 5.93.187 வாக்காளர்களை கொண்டுள்ள நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் 3,58,079 பேர் வாக்களித்த நிலையில் 2.35.108 பேர் வாக்களிக்கவில்லை.
அதேநேரம் வாக்களித்த 3,58,079 பேரில் 32,767 பேரின் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய 3,25,312 பேரின் வாக்குகளே செல்லுபடியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று வன்னி மாவட்டம் 3,06,081 வாக்காளர்களைக் கொண்டுள்ள நிலையில் 2,11,140 பேர் வாக்களித்த அதே நேரம் 94,941 பேர் வாக்களிக்கவில்லை.
வாக்களித்த 2.11,140 பேரில் 15.254 பேரின் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய 1,95,886 பேரின் வாக்குகளே செல்லுபடியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் 3.30.049 பேர் வாக்களிக்காத நிலையில் 48.021 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
அதேபோன்று கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு தேர்தல் மாவட்டம் 4,49,686 வாக்காளர்களைக் கொண்டுள்ள நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் 3,02,382 பேர் வாக்களித்த நிலையில் 1,47,304 பேர் வாக்களிக்கவில்லை.
அதேநேரம் வாக்களித்த 3.02.382 பேரில் 15,329 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய 2.87.053 பேரின் வாக்குகளே செல்லுபடியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று திருகோணமலை மாவட்டம் 3.15,925 வாக்காளர்களை கொண்டுள்ள நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் 2.18.425 பேர் வாக்களித்த அதேநேரம் 97,500 பேர் வாக்களிக்கவில்லை.
வாக்களித்த 2,18,425 பேரில் 13,537 பேரின் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய 2,04,888 பேரின் வாக்குகளே செல்லுபடியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று திகாமடுல்ல மாவட்டம் (அம்பாறை ) 5,55,432 வாக்காளரை கொண்டுள்ள நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் 3.80.523 பேர் வாக்களித்த அதேநேரம் 1.74.909 பேர் வாக்களிக்கவில்லை.
வாக்களித்த 3.80,523 1 17.599 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய 3.62,924 பேரின் வாக்குகளே செல்லுபடியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது .
அதன்படி கிழக்கு மாகாணத்தில் 4,19,713 பேர் வாக்களிக்காத நிலையில் 46,465 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.