தமிழ்ப் பொது வேட்பாளருக்கு தமிழ் மக்கள் அளித்த வாக்குகள் தமிழ்த் தேசியத்துக்கானவை- பொ.கஜேந்திரகுமார் தெரிவிப்பு.
தமிழ்ப் பொது வேட்பாளருக்கு தமிழ் மக்கள் அளித்த வாக்குகள் தமிழ்த் தேசியத்துக்கானவையே. அத்துடன், 30 சதவீதமான தமிழ் மக்கள் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர் என்று கூறியுள்ளார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
கொழும்பில் அவர் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.
மேலும், "இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸ நாயக்கவுக்கு நாங்கள் ஒரு வேண்டு கோளை விடுக்கின்றோம்.
"தென்னிலங்கை மக்கள் எவ்வாறு கடந்தகால அரசியல் தலைமைகளை புறந்தள்ளி மாற்றத்தை விரும்பினார்களோ அதையே தமிழ்த் தேசமும் விரும்புகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒற்றையாட்சி முறையை தவிர்த்து சமஷ்டியை முன்னிறுத்தும் ஆட்சியையே நங்கள் எதிர்பார்க்கின்றோம்.
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில், வடக்கு மக்கள் இலங்கை தமிழ் அரசுக் கட்சி முன்வைத்த நிலைப்பாட்டுக்கு ஆதரவளித்திருந்தாலும் ஒப்பீட் டளவில் தமிழ மக்கள் பொது வேட்பாளருக்கு அளித்த ஆதரவு மூலம் தமிழ்த் தேசியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளனர் - என்றார்.
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர் தலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புறக்கணிக்குமாறு அழைப்பு விடுத்திருந்ததுடன் பிரசாரங்களிலும் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.