இந்திய துணைத் தூதரகம் ஒன்றை கிழக்கு மாகாணத்தில் அமைக்குமாறு இந்தியத் தூதுவர் சந்தோஷ்ஜாவிடம் இலங்கை தமிழரசுக் கட்சி கோரிக்கை.
4 months ago
இந்திய துணைத் தூதரகம் ஒன்றை கிழக்கு மாகாணத்தில் அமைக்குமாறு இந்தியத் தூதுவர் சந்தோஷ்ஜாவிடம் இலங்கை தமிழரசுக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
நேற்று முன்தினம் வியாழக்கிழமை மட்டக்களப்புக்கு வருகை தந்த இந்தியத் தூதுவர் சந்தோஷ்ஜாவை சந்தித்த தமிழ் அரசுக் கட்சியின் கிழக்கு மாகாண பிரதிநிதிகள் இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர்.
மேலும் இந்த சந்திப்பில், கிழக்கில் இந்தியாவின் முதலீட்டு திட்டங்கள் மற்றும் கிழக்கு மாகாண அபிவிருத்தி சமகால அரசியல் விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டன.
இந்த சந்திப்பில், பாராளுமன்ற உறுப்பினர்களான த. கலையரசன், இரா. சாணக்கியன், மட்டக்களப்பு மாநகர முன்னாள் மேயர் சரவணபவன் ஆகி யோர் பங்கேற்றிருந்தனர்.