தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரித்து நேற்று நடந்த பரப்புரை கூட்டத்தில் ஆயிரக் கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

4 months ago


தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரித்து நேற்று நடந்த பரப்புரை கூட்டத்தில் ஆயிரக் கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பின் சார்பில் சங்கு சின்னத்தில் தமிழ்ப் பொது வேட் பாளராக பா. அரியநேத்திரன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து வவுனியா - குருமண்காடு கலைமகள் சனசமூக நிலைய மைதானத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்த தலைமையில் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பொது வேட்பா ளர் அரியநேத்திரன் மற்றும் அவரை ஆதரித்து ரெலோ தலைவரும் எம்.பியு மான செல்வம் அடைக்கலநாதன், ஈ. பி. ஆர். எல். எவ். தலைவர் சுரேஷ் பிறேம சந்திரன், வடக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சர் சிவநேசன், தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் அருண் தம்பிமுத்து, ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன், யாழ். மாநகர முன்னாள் மேயர் மணிவண்ணன் ஆகியோர் பங்கேற்று பேசியிருந்த னர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


அண்மைய பதிவுகள்