யாழ்.வட்டுக்கோட்டை தென்மேற்கு பகுதியில் உள்ள ஒரு வீதிக்கு பாரதி வீதி என பெயர்சூட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
யாழ்.வட்டுக்கோட்டையில் பாரதி வீதியானது திறந்து வைக்கப்பட்டது. வட்டு தென்மேற்கு பகுதியில் உள்ள குறித்த வீதிக்கு பாரதி வீதி என பெயர் சூட்டப்பட்டு அந்த வீதியானது திறந்து வைக்கப்பட்டது.
விருந்தினர்கள் மங்கல இசை வாத்தியங்கள் முழங்க அழைத்து வரப்பட்டு, மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. அதனை தொடர்ந்து விருந்தினர்களது உரைகள், வீதி திறந்து வைப்பு வைபவம் என்பன இடம்பெற்றன.
யாழ். நண்பர்கள் அமைப்பின் தலைவர் கலாநிதி சிதம்பரமோகன் அவர்களது தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மறவன்புலவு சச்சிதானந்தம் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன், மதகுருமார், வலிமேற்கு பிரதேச செயலாளர் திருமதி கவிதா உதயகுமார், வலிமேற்கு பிரதேச சபை செயலாளர் சண்முகராஜா பாலரூபன், கிராம சேவையாளர் திரு.சிவபாலன் சிவகுமார், பேராசிரியர் கௌரவ பொன் பாலசுந்தரம்பிள்ளை, கலாநிதி கந்தையா சிவராஜா, Dr.MP.நடராஜா, வைத்தியசூரி செ.பரமசிவம்பிள்ளை கா.கோபாலகிருஸ்ணன் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.