இலங்கை இராணுவத்தின் 75ஆவது ஆண்டை முன்னிட்டு அதிகாரிகள் உள்ளிட்ட 1,412 படையினருக்கு பதவி உயர்வு

2 months ago




இலங்கை இராணுவத்தின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அதிகாரிகள் உள்ளிட்ட 1,412 படையினருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி லெப். ஜெனரல் விக்கும் லியனகேயின் பரிந்துரையின் பேரில்                   முப்படைகளின் சேனாதிபதி ஜனாதிபதி அநுரகுமார  திஸநாயக்கவால் இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டன.

இந்த வகையில், 131 லெப் டினன்கள் கப்டன் நிலைக்கும் (உபகரண பொறுப்பாளர்கள் உட்பட) மற்றும் 8 இரண்டாம் லெப்டினன்ட்கள் லெப்டினன்ட் நிலைக்கும் (நிரந்தர மற்றும் தொண்டர் படைகளின்) அதி காரிகள் பிரிவில் இவ்வாறு நிலை உயர்வு பெற்றுள்ளனர்.

அத்துடன், 99 அதிகார ஆணையற்ற அதிகாரிகள் ஐஐ, அதிகார ஆணையற்ற அதிகாரிகள் ஐ நிலைக்கும், 185 பணி நிலை சார்ஜண்ட்கள் அதிகார ஆணையற்ற அதிகாரிகள் ஐஐ நிலைக்கும், 380 சார்ஜண்ட்கள் பணிநிலை சார்ஜண்ட் நிலைக்கும், 346 கோப்ரல்கள் சார்ஜண்ட் நிலைக்கும், 111 லான்ஸ் கோப் ரல்கள் கோப்ரல் நிலைக்கும், 152 சிப்பாய்கள் லான்ஸ் கோப்ரல் நிலைக்கும் நிரந்தர மற்றும் தொண்டர் படையணிகளில் நிலை உயர்வு பெற்றுள்ளனர்.