ஐ.நா மனித உரிமைகள் சபையால் இலங்கையின் கடந்தகால மீறல் ஆதாரங்களைத் திரட்டுவது அவசியம். சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் வலியுறுத்து

3 months ago



ஐ.நா.மனித உரிமைகள் சபையால் முன்னெடுக்கப்பட்டுவரும் இலங்கையின் கடந்தகால மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் பொறி முறையானது ஏதேனுமொரு மட்டத்தில் தொடரவேண்டியது அவசியம்.

இவ்வாறு சித்திரவதைகளுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் நம்பிக்கை நிதியத்தின் உறுப்பினரும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளருமான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் வலியுறுத்தியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி 24 ஆம் திகதி ஆரம்பமாகி, ஏப்ரல் 4 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் காலநீடிப்புச் செய்யப்பட்ட 57/1 தீர்மானம் எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்துடன் முடிவுக்கு வருகின்றது.

இலங்கையில் இடம்பெற்ற கடந்த கால மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறையை எவ்வகையிலேனும் தொடரவேண்டியது அவசியம்.

ஏனெனில் இலங்கையில் மீறல்கள் எவையும் இடம்பெறவில்லை என அரசாங்கங்கள் தொடர்ச்சியாகக் கூறிவருவதை நிராகரிக்கும் பொறிமுறையாக இதுவே இருக்கிறது-என்றார். 

அண்மைய பதிவுகள்