திருகோணமலையில் மக்களின் விவசாய நிலங்களை தொல்பொருள் நிலம் என்று கூறி பிக்கு ஒருவரால் இடையூறு


திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் உள்ள மக்களின் விவசாய நிலங்களை தொல்பொருள் நிலம் என்றுகூறி பிக்கு ஒருவர் அப்பகுதி மக்களுக்கு பெரும் இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறார்.
புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவின் ஆட்சியிலாவது இதற்கு உரிய தீர்வை பெற்றுத்தர வேண்டுமென அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருகோணமலை திரியாய்க் கிராமத்தின் பூர்வீக வயல் நிலங்களில் முக்கிய வயல் வெளிகளான வளத்தாமரை, ஆதிக்காடு, ஒட்டுப்புல்மோட்டை, நீராவிக் கண்டல் மற்றும் வேடன்குளம் என உள்ளடக்கிய வயல் வெளிகளில் மக்கள் பரம்பரை பரம்ப ரையாக நெற்செய்கை மேற் கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் புல்மோட்டை அரிசி மலைப் பிக்குவால் அடாவடியாக கையகப்படுத்தப்பட்ட 88 ஏக்கர் பொதுமக்களின் உறுதிக் காணியில் விவசாயம் மேற்கொள்ள பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
வருடா வருடம் பெரும் போக செய்கையின் போது இவ்விதமான நெருக்கடிகளை மக்கள் எதிர்கொள்வதுடன், பிக்குவின் அடாவடியால் பயந்து இருப்பதுமான அவல நிலையில் மக்கள் உள்ளனர்.
நீதிமன்றால் மக்களிடம் காணிகளை கையப்படுத்தக் கோரியும் பிக்கு அடாவடியான முறையில் இந்தச் செயல்பாட்டை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
