
கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் நேற்று முன்தினம் புதன்கிழமை பாதாள உலக கும்பலைச் சேர்ந்த கணேமுல்லை சஞ்சீவ என்பவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 25 வயதுடைய பொலிஸ் அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான பொலிஸ் அதிகாரி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த கணேமுல்லை சஞ்சீவ என்பவரை சுட்டுக் கொலை செய்வதற்கு சட்டத் தரணி வேடத்தில் சென்ற பிரதான சந்தேக நபருக்கு உதவி செய்த பெண்ணுடன் தொலைபேசியில் தொடர்புகளை பேணி வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
