வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக சென்றவர்களின் எண்ணிக்கை, அதிகரிப்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவிப்பு
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, கடந்த செப்ரெம்பர் மாதத்தில், வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக சென்றவர்களின் எண்ணிக்கை, கணிசமாக அதிகரித்துள்ளதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
செப்டெம்பர் மாதத்தில் மாத்திரம், 28 ஆயிரத்து 344 பேர், வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.
அதற்கமைய, வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை, 10 வீதம் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு செம்ரெம்பர் மாதம், 25 ஆயிரத்து 716 பேர், வேலை வாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளனர்.
2024 ஆம் ஆண்டின் கடந்த 9 மாதங்களில், 2 இலட்சத்து 40 ஆயிரத்திற்கும் அதிகமான இலங்கையர்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக, நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
அவர்களில், 99 ஆயிரத்து 939 பெண்களும், ஒரு இலட்சத்து 42 ஆயிரத்து 170 ஆண்களும் அடங்குகின்றனர்.
கடந்த 9 மாதங்களில், 6 ஆயிரத்து 391 பேர் இஸ்ரேலுக்கும், 6 ஆயிரத்து 295 ஜப்பானுக்கும், 5 ஆயிரத்து 870 பேர் தென் கொரியாவுக்கும் சென்றுள்ளனர் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.