மலையக மக்களுக்கான 14 அம்சக் கோரிக்கைகளை உள்ளடக்கிய மலையக சாசனம் நேற்று வெளியிடப்பட்டது.

3 months ago


மலையக மக்களுக்கான 14 அம்சக் கோரிக்கைகளை உள்ளடக்கிய மலையக சாசனம் நேற்று வெளியிடப்பட்டது.

நுவரேலியாவில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற நிகழ்வில் மலையக சாசனம் மாலை வெளியிடப்பட்டது.

நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

நுவரெலியாவிலுள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பேராசிரியர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், சிவில் அமைப்பினர், வர்த்தகர்கள், துறைசார் ஆர்வலர்கள், துறைசார் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் கலந்துக்கொண்டிருந்தனர்.

இந்த மலையக சாசனத்தில் பங்களிப்புகளின் அங்கீகாரம், நிலம் மற்றும் வீடு, வேலை வாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம், முழு குடியுரிமைக்கான அங்கீகாரம் மற்றும் பிரகடனம் உள்ளிட்ட 14 அம்சக் கோரிக்கைகள் இந்த மலையக சாசனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.