இந்தியத் தூதரகத்தால் 'ஓப்பின்ஹவுஸ்'

6 months ago

வடக்கு மாகாணத்தில் வசிக்கும் மற்றும் தொழில் காரணமாக தங்கியிருக்கும் இந்தியப் பிரஜைகளுக்கான தூதரக விடயங்க ளுக்கான 'ஓப்பின் ஹவுஸ்' கலந்துரையாடல் யாழிலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் ஒவ்வொரு புதன்கிழமையும் மு.ப. 10 மணிமுதல் 11 மணிவரை நடைபெறவுள்ளது.

வடக்கு மாகாணத்திலுள்ள 5 மாவட்டங்களில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் இந்தியப் பிரஜைகள் எதிர்நோக்கும் கடவுச்சீட்டு, தூதரக விவகாரங்கள் அல்லது அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பூர்த்திசெய்யும் வகையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டங்களில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகளின் விசா, தூதரக சேவைகள் போன்ற சான்றொப்பம் போன்றவை தொடர்பான குறைகள், வேண்டுகைகள் போன்றவை இந்தக் கூட்டங்களின்போது பூர்த்தி செய்யப்படும்.

பங்கேற்க விரும்புபவர்கள் 0212220504 என்ற இலக் கத்துடன்தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.