இறுதிப் போரில் தமிழர்களை அழிப்பதற்காக இளைஞர்களை திரட்டி இராணுவத்துக்கு கொடுத்த குழுவின் சக்தியாக அநுரகுமார இருந்திருக்கின்றார். என்று எம்.பி செல்வராசா கஜேந்திரன் தெரிவிப்பு.

4 months ago


இறுதிப் போரில் ஒன்றரை இலட்சம் தமிழர்களை அழித்து ஒழிப்பதற்காக பல்லாயிரக் கணக்கான இளைஞர்களை திரட்டி இராணுவத்துக்கு கொடுத்த கொலைவெறி பிடித்த குழுவின் தலைமைச் சக்தியாக அநுரகுமார இருக்கின்றார் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளு மன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

திருக்கோவிலில் உரை யாற்றியபோது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,

75 வருடங்களாக தமிழருக்கு உரிமை வழங்க மாட்டோம் என்று பேரினவாதிகள் கூறி வரு கின்றார்கள். குறிப்பாக பேரின வாதிகள் சிங்கள மக்களுக்கு இவ்வாறாக கருத்துக்களை கூறி வருகின்றார்கள். அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இது ஒரு பௌத்த நாடு. சிங்கள நாடு. இதை பேணிப் பாதுகாப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

அது மட்டுமன்றி வடக்கு - கிழக்கில் 1000 பௌத்த விகாரை அமைப்ப தாகவே கூறி வருகின்றனர். சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனமும் அவ்வாறு தான் இருந்திருக்கின்றது. சஜித் பிரேமதாஸ, புத்தசாசன அமைச்சராக இருந்த போது நீராவியடி பிள்ளையார் ஆலய முற்றத்தில் ஒரு பௌத்த பிக்குவின் சடலம் எரிக்கப்பட் டது. இவ்விடயம் அமைச்சரின் ஆலோசனை வழிகாட்டலுடன் தான் நடைபெற்றது. இது தவிர அவரது காலத்தில் தான் யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் சட்டவிரோத விகாரை கூட கட்டப்பட்டிருந்தது. அநுரகுமார திஸநாயக்க மோசமான இனவெறி கொண்ட ஒருவர். இறுதிப் போரில் ஒன்றரை இலட்சம் தமிழர்களை அழித்து ஒழிப்பதற்காக பல்லாயிரக் கணக்கான இளைஞர்களை திரட்டி இராணுவத்துக்கு கொடுத்த கொலைவெறி பிடித்த குழு ஒன்றின் தலைமைச் சக்தியாக அநுர இருக்கின்றார்.

அது மாத்திரமன்றி வடக்கு கிழக்கை வழக்கு தாக்கல் செய்து பிரித்த இனவெறியர்கள் இவர்கள். இவர்கள் எல்லோரது நிலைப் பாடுகளும் இவைகள் தான். இதில் நாமல் ராஜபக்ஷ விதி விலக்கானவரல்லர்.

இதனால் தான் இவர்களிடம் தமிழருக்கு உரிமை கொடுக்கப் போகின்றோம் எனக் கூறினால் தேர்தல் விஞ்ஞாபனத்தில் எழுதி உங்களின் சிங்கள மக்களுக்குச் சொல்லுங்கள். இந்த தோல்வியடைந்த ஒற்றையாட்சியை ஒழிக்கப் போகின்றோம். சமஷ்டியை கொண்டு வரப் போகின்றோம் என்பதை தேர்தல் விஞ்ஞாபனத் தின் ஊடாக வெளிப்படுத்தி வாருங்கள் என நாங்கள் கூறுவது நம்பிக்கைக்காக தான் - என்றார்.