பாதுகாப்புத் தரப்பினரின் வர்த்தகத்தால் ஏற்படும் பாதிப்பு தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலருடன் கலந்துரையாடியதாக ஐ.நாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் அன்ரூ தெரிவிப்பு

பாதுகாப்புத் தரப்பினர் முன்னெடுத்துள்ள வர்த்தக நடவடிக்கைகளால் சிவில் சமூகத்தினருக்கு ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலருடன் கலந்துரையாடியதாக ஐ.நாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் அன்ரூ வடக்கு ஆளுநரிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான ஐ.நாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் அன்ரூ தலைமையிலான குழு வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தலைமையிலான வடக்கு மாகாண அலுவலர்களை ஆளுநர் செயலகத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை சந்தித்துக் கலந்துரையாடினர்.இதன்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
வடக்கைச் சேர்ந்த பல தரப்பட்டவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளோம்.
முன்னுரிமை அடிப்படையில் வேலைத்திட்டங்கள் அமையும்.
மக்களுக்கு அரசாங்கம் வாக்குறுதியளித்த பல விடயங்கள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளன.
வட பகுதி மக்கள் முதல் தடவையாக அரசாங்கத்துக்கு தேர்தலில் பெருமளவு ஆதரவு வழங்கியுள்ளனர்.
வடக்கில் அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தியுள்ளோம்- என்றார்.
அத்துடன் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவின் யாழ்ப்பாணப் பயணம் தொடர்பிலும் அவர் இதன்போது வழங்கிய வாக்குறுதிகள் தொடர்பிலும் குறிப்பாக மக்களின் காணிகள் மக்களுக்கே வழங்கப்படும் என்ற உறுதி மொழி தொடர்பிலும் ஐ. நா. வதிவிடப் பிரதிநிதி பிரஸ்தாபித்தார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
