சென்னை - யாழ்ப்பாணம் புதிய விமானசேவை இண்டிகோ எயார்லைன்ஸ் அறிவிப்பு.

5 months ago



சென்னை - யாழ்ப்பாணம் இடையே புதிய விமான சேவையை ஆரம்பிக்கவுள்ள தாக இண்டிகோ எயார் லைன்ஸ் நிறுவனம் அறி வித்துள்ளது.

இந்த விமானசேவை செப்ரெம்பர் 1 ஆம் திகதி முதல் ஆரம்ப மாகவுள்ளதாக தெரிவிக்கப்பட் டுள்ளது. இந்த விமானசேவை சென்னையிலிருந்து நாள்தோறும் பிற்பகலில் யாழ்ப்பாணத்துக்கு இடம்பெறவுள்ளது. இதற்கமைய சென்னை விமான நிலையத்தில் இருந்து பிற்பகல்1.55 மணிக்கு புறப்படும் இண்டிகோ எயார்லைன்ஸ் விமானம், பி.ப. 3.10 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையத்தை வந்தடையும். பி.ப. 3.55 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5.10 மணிக்கு மீண்டும் சென்னை விமான நிலையத்தை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை அலையன்ஸ் எயார் நிறுவனத்தின் யாழ்ப்பா ணத்துக்கான விமானசேவை திங்கள், செவ்வாய், வியாழன். சனி என வாரத்தில் 4 நாள்கள் காலை வேளையில் இயக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



அண்மைய பதிவுகள்