சீனா ஜிங்கு மாகாணத்தில் நிறுவனங்களில் பெண்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்யாவிட்டால் வேலை இல்லை.

5 months ago


சீனா-ஜிங்சு மாகாணத்தில் தனியார் நிறுவனங்களில் விதிக்கப்பட்டுள்ள புதிய சட்டத்தால் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.

குறித்த தனியார் நிறுவனத்தில் பிரசவ கால விடுமுறையைத் தவிர்ப்பற்காக வேலையாட்களை தேர்வு செய்யும் போது புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், பெண்கள் தான் இந்த பரிசோதனைக்கு பெரிதும் உட்படுத்தப்படுகிறார்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனோடு தொடர்புடைய நேர்காணலின் போது முழு உடற் பரிசோதனையும் கர்ப்ப கால பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகின்றது.

பரிசோதனையின் முடிவில் பெண்கள் கர்ப்பமாக இருப்பது தெரிந்தால் அவர்களுக்கு வேலை கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நேர்காணலில் குடும்ப கட்டுப்பாடு தொடர்பாகவும் கேள்விகள் கேட்க்கப்படுவதாகவும் ஏற்கனவே குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக் கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், இந்த செய்தி வெளி யானதிலிருந்து அதற்கு எதிராக பல சமூக ஆர்வலர்கள் தங்களின் எதிர்ப்புக்களை வெளிப்படுத்தி வருவதோடு பெண் சுதந்திரம் தொடர்பாகவும் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக் கது.



அண்மைய பதிவுகள்