எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனாவால் அபகீர்த்தி

4 months ago



எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனாவால் அபகீர்த்தி

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று (21) இடம்பெற்றது.

இன்றைய முதல்நாள் அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக விசேடமான ஆசன ஒதுக்கீடுகள் எதுவும் இருக்காது என்பதுடன், விரும்பிய ஆசனத்தில் அமர்வதற்கான வாய்ப்புக் கிடைக்குமென அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அங்கிருந்த பாதுகாவலர்கள் வேறு ஆசனத்தில் அமரச் சொன்னதைத் தொடர்ந்து, ஒரு சில நிமிடங்கள் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

"இங்கு வேறு ஆசனத்தில் அமர வேண்டுமென எங்காவது எழுதி உள்ளதா, எதிர்க்கட்சித் தலைவருக்கு வேண்டுமெனில் அவரைச் சென்று எங்காவது அமரச் சொல்லுங்கள். நான் இங்குதான் இருப்பேன்" என்றார்.

பின்னர், தான் எந்தக் கட்சியிக்கு ஆதரவு வழங்கினாலும், சஜித் பிரேமதாசவுக்கு ஒருபோதும் ஆதரவு வழங்கமாட்டேன் எனவும் இராமநாதன் அர்ச்சுனா குறிப்பிட்டார்.

இவரது இந்த செயல்பாடானது தற்போது சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

அண்மைய பதிவுகள்