கனடாவின் ரொறன்ரோவில் போதைப்பொருள் குற்றச்செயல்க ளுடன் தொடர்புடைய 11 சந்தேக நபர்கள் கைது.

கனடாவின் ரொறன்ரோவில் போதைப்பொருள் குற்றச்செயல்க ளுடன் தொடர்புடைய 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக 60க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பில் சுமார் ஒரு மாத கால விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக இந்தச் சந்தேக நபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஹால்டன் பிராந்திய பொலிஸ் சேவையினர் இந்த விடயம் தொடர்பில் விசாரணைகள் நடத்தியுள்ளனர்.
இந்த விசேட விசாரணை நடவ டிக்கை 'கட் ஃபிஷ்' எனப் பெயரிடப்பட்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களிடமிருந்து மூன்று கைத்துப்பாக்கிகள், 4 கிலோ கிராம் எடையுடைய மெத்தப்பட்டமைன் போதை பொருள், 3 கிலோ கிராம் எடையுடைய கொக்கேய்ன் போதை பொருள், சுமார் ஒரு கிலோ கிராம் எடையுடைய பென்டனயில் போதை பொருள் மற்றும் 120,000 டொலர் பணம், இரண்டு வாகனங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
