யாழ். கொடிகாமத்தில் வெள்ளம் தேங்கி நிற்கும் பிரதேசத்தை புகையிரத திணைக்கள அதிகாரிகள் பார்வையிட்டனர்.

2 weeks ago



யாழ். கொடிகாமம் நாவலடி பகுதியில் வெள்ளம் வடிந்தோடாது தேங்கி நிற்கும் பிரதேசத்தை புகையிரத திணைக்கள அதிகாரிகள் பார்வையிட்டனர்.

வெள்ளம் தேங்கி நிற்பதால் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அப்பகுதி மக்கள் முறைப்பாடு செய்திருந்தனர்.

அத்தோடு, வெள்ளத்தை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனையடுத்தே வெள்ளம் வெளியேற முடியாது தேங்கி நிற்கும் இடங்களை பார்வையிட்ட அதிகாரிகள், மக்களுடன் கலந்துரையாடியதுடன் இனிவரும் காலங்களில் வெள்ளம் தேங்கி நிற்காது வடிந்தோட ஏற்பாடுகளை செய்து தருவதாகவும் உறுதியளித்துள்ளனர். 

அண்மைய பதிவுகள்