அமெரிக்காவில் உள்ள பூங்கா ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் சாவு 6 பேர் காயம்.
8 months ago



அமெரிக்க, நியூயோர்க்கின் அப்ஸ்டேட்டில் உள்ள பூங்கா ஒன்றில், மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு குறைந்தது ஆறு பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேப்பிள்வுட் பூங்காவில், நேற்று (28) மாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் 20 வயதுடைய ஒருவர் கொல்லப்பட்டதுடன், மற்றொரு நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதோடு ஐந்து பேர் சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுட்டுக்கொல்லப்பட்டவரின் அடையாளம் இன்னும் வெளியிடப்படவில்லை.
துப்பாக்கிச் சூடு நடந்த போது அந்த பகுதியில் விருந்து ஒன்று நடந்ததை பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.
இந்த நிலையில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
