கிழக்கு மாகாண ஆளுநர் கிழக்கு கடற்படைத் தளபதிக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

2 months ago



கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்ன சேகரவுக்கும் கிழக்கு கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கிழக்கு கடற்படைத் தளபதி, புதிய ஆளுநருக்கு முதலில் வாழ்த்து தெரிவித்து சிநேக பூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.

கிழக்கு மாகாணம் சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் வாழும் பெரும் கரையோரப் பிரதேசமாக இருப்பதால், அந்த மாகாணத்தில் உள்ள கடல் பாதுகாப்பு மற்றும் மீனவர்களின் பாதுகாப்பு குறித்து இந்தச் சந்திப்பின் போது ஆராயப்பட்டது.