யாழ்.எழுதுமட்டுவாலில் குப்பி விளக்கு பற்றியதில் யாழ். மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.
குப்பி விளக்கில் இருந்து ஆடையில் தீ பற்றியமையால் மூதாட்டி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் எழுதுமட்டு வாழ் பகுதியைச் சேர்ந்த நிக்லஸ்பிள்ளை வல்லமரி (வயது 88) எனும் மூதாட்டியே உயிரிழந்துள்ளார்.
கடந்த 16ஆம் திகதி இரவு வீட்டின் வெளியே குப்பி விளக்குடன் சென்றபோது, விளக்கின் தீ ஆடையில் பற்றிக்கொண்டது.
அதனை அடுத்து வீட்டார் தீயை அணைத்து, மூதாட்டியை காப்பற்றி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக் காக அனுமதித்தனர்.
அங்கிருந்து மேலதிக சிகிச் சைக்காக யாழ்.போதனா வைத் தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அவர் நேற்று முன்தினம் புதன்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.