உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானங்களுள் ஒன்றான எயார்பஸ் ஏ380 கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது.

1 month ago




கட்டார் எயார்வேய்ல் இயக்கப்படும் உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானங்களுள் ஒன்றான எயார்பஸ் ஏ380 நேற்று முன்தினம் இரவு கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.

அவுஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட குறித்த விமானம் எரிபொருள் நிரப்புதல் மற்றும் பணியாளர்களை மாற்றுவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கம் செய்யப்பட்டது.

குறித்த நடவடிக்கைகளின் பின்னர் விமானம் மீண்டும் கட்டாரின் டோஹா நோக்கி பயணத்தை ஆரம்பித்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



அண்மைய பதிவுகள்