பாராளுமன்ற உறுப்பினர்கள் அனுபவித்த சலுகைகள் குறைப்பு, பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிப்பு
4 months ago

பாராளுமன்ற உறுப்பினர்கள் அனுபவித்து வந்த சில சலுகைகள் குறைக்கப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்காக இதுவரை காலமும் கைத்துப்பாக்கி வழங்கப்பட்டு வந்த நிலையில், அந்த வசதியை நீக்குவது தொடர்பில், கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களின் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதுடன், இதுவும் பெருமளவில் நீக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரையில் வழங்கப்பட்டு வந்த வரியில்லா வாகன அனுமதிப்பத்திரமும் நீக்கப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
