


யாழில் கடற்றொழிலுக்குச் சென்றவர் வள்ளத்தில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
யாழ்.அராலி மத்தியைச் சேர்ந்த சி.நாகராசா (வயது 53) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
நேற்று (22) இரவு தொழிலுக்குச் சென்ற இவர் இன்று (23) காலை வீடு திரும்பாததைத் தொடர்ந்து சக தொழிலாளர்களும் உறவினர்களும் தேடுதலில் ஈடுபட்டனர்.
இதன்போது, பொன்னாலைக் கடற்கரையோரமாக, இராவணேஸ்வரத்திற்கு சமீபமாக வள்ளம் கரையொதுங்கி இருந்ததைக் கண்டனர்.
குறித்த கடற்றொழிலாளி வள்ளத்தினுள் சடலமாகக் காணப்பட்டார்.
இது தொடர்பாக கிராம சேவையாளர் மற்றும் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த அவர்களும் திடீர் மரண விசாரணை அதிகாரியும் விசாரணையை மேற்கொண்டதை அடுத்து உடற்கூற்றுப் பரிசோதனைக்காக சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
