840 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவரை சுன்னாகத்தில் கைது செய்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட சூரிய பண்டார தலைமையில் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இந்த நபர் கைது செய்யப்பட்டார்.
கைதானவர் ஏழாலை கிழக்கைச் சேர்ந்தவர் என்று தெரிய வருகின்றது.
கைது செய்யப்பட்ட நபர் சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம். எவ். எம். பெடோஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.
கைதானவர் முன்னரும் போதை மாத்திரையுடன் கைதாகி அவருக்கு எதி ராக நீதிமன்றில் வழக்கு ஒன்றும் நிலுவையில் உள் ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.(ஐ-01-05)