யாழில் புகையிலையைச் செய்கையாளர்களிடம் கடனுக்கு கொள்வனவு செய்து, 5 கோடி ரூபாவுக்கும் மேல் நிலுவையில் தலைமறைவானவர் கைது
4 months ago

யாழ். ஊர்காவற்றுறை பகுதியைச் சேர்ந்த புகையிலையைச் செய்கையாளர்களிடம் புகையிலையைக் கடன் அடிப்படையில் கொள்வனவு செய்து, 5 கோடி ரூபாவுக்கும் மேல் நிலுவை வைத்துவிட்டுத் தலைமறை வான பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்றவிசாரணைப் பிரிவினருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே அந்த நபர் தலைமறைவாக இருந்த நிலையில், வவுனியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபருக்கு எதிராக 14 முறைப்பாடுகள் தனித்தனியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு அவர் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் முற்படுத்தப்பட்டார்.
இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதவான் சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
