உலகின் மிகச்சிறந்த சுற்றுலா நகரங்களின் பட்டியலில் யாழ்ப்பாணம் முன்னணியில் தரப்படுத்தியது 'தி ரைம்ஸ்' பத்திரிகை.

1 week ago



உலகின் மிகச்சிறந்த சுற்றுலா நகரங்களின் பட்டியலில் யாழ்ப்பாணத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து முன்னணியில் தரப்படுத்தி இருக்கின்றது 'தி ரைம்ஸ்' பத்திரிகை.

2025 ஆம் ஆண்டு விடுமுறைக் காலத்தைச் செலவிடக்கூடிய மிகச்சிறந்த 88 நகரங்களை 'தி ரைம்ஸ்' பத்திரிகை பட்டியலிட்டுள்ளது.

அந்தப் பட்டியலில் யாழ்ப்பாணமும் முன்னணியில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தின் கலாசாரம், வரலாறு, அதன் அற்புதமான கிராமப்புறங்கள் மற்றும் உணவு வகைகள் அந்த நகரத்தை சிறந்த சுற்றுலாத்தலமாக மாற்றுகின்றன.

யாழ்ப்பாணத்தில் அனுபவிக்கக்கூடிய உற்சாக உணர்வும், உணவுகளும் என்றும் மகத்துவமானவை என்றும் 'தி ரைம்ஸ்' பத்திரிகை தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தின் தரமான ஆட்டுக்கறி மற்றும் இயற்கைச் சுவை நிறைந்த ஒடியல் கூழ், சூப் வகைக்கு வளம் சேர்க்கும் கறித்தூள் அல்லது கறிப்பொடி வகைகளின் சுவை அபாரமாக அமைந்திருக்கிறது.

அது மட்டுமல்லாது கருவாடு மற்றும் சர்க்கரைகள் என்பனவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவு வகைகளும் விசேடமானவையாக அமைந்திருக்கின்றன என்றும் 'திரைம்ஸ்' பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் சுற்றுலா விரும்பிகள் அதிகம் செல்கின்ற இடமாக நல்லூர் கந்தசுவாமி கோவில் காணப்படுகிறது என்றும் 'திரைம்ஸ்' பத்திரிகை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. 

அண்மைய பதிவுகள்