வாளுடன் இளைஞர் ஒருவரை வடமராட்சி கிழக்கு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வடமராட்சி கிழக்கு - குடத்தனை - மாளிகைத்திடல் கிராமத்தைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கைதான இளைஞர் வாள்வெட்டு சம்பவங்கள் மற்றும் மக்களை அச்சுறுத்திய சம்பவங்களுடன் தொடர்புபட்டவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இதேநேரம், கைதான இளைஞர் பிடியாணை பிறப்பிக்கப் பட்டவராவார். இவர், வீட்டிலிருந்த சமயம் தகவலறிந்த பொலிஸார் வெள்ளிக்கிழமை அவரை கைது செய்தனர்.
சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.