தமிழ் பொது வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் முல்லைத்தீவு, வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றுள்ளது.
8 months ago






தமிழ் பொது வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் முல்லைத்தீவு, வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரனின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் முல்லைத்தீவு மண்ணில் நேற்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இதற்கு முன்னர் முள்ளிவாய்க்கால் மண்ணுக்கு சென்ற தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் முள்ளிவாய்கால் நினைவு முற்றத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்திய பின்னர் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.
இந்த நிகழ்வில் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன், தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
