மியன்மாரில் உள்ள சைபர் கிரைம் முகாம்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 32 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
அவர்களை விரைவில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு இலங்கை அரசாங்கம் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்புடன் ஒருங்கிணைக்கவுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு மற்றும் தாய்லாந்து மற்றும் மியன்மாரில் உள்ள இலங்கைத் தூதுவர்கள் இந்தச் செயன்முறையை ஒருங்கிணைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.