கிளிநொச்சியில் அதிகரித்த மதுபானசாலைகளை மூடுமாறு கோரி இன்று ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுப்பு

2 weeks ago



கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்த மதுபானசாலைகளை உடனடியாக மூடுமாறு கோரி இன்று ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி டிப்போ சந்தியில் இருந்து ஆரம்பமான பேரணி மாவட்ட செயலகம் வரை சென்று அங்கு மாவட்ட பதில் அரச அதிபரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.

வடக்கு - கிழக்கு மறுவாழ்வு அமைப்பு மற்றும் மது போதைக்கு எதிரான இயக்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில்  சர்வமதத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.