ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெல்ல வேண்டும். என்று தமிழர்களின் தீர்க்கப்படாத இனப் பிரச்சினைக்கு தீர்வு காணுவது முக்கியம்."-இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேற்று முன்னிரவு நேரில் சந்தித்த போது தெரிவித்திருக்கிறார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா.
ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவுக்கும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் இடையி | லான சந்திப்பு நேற்று மாலை யாழ்ப்பாணம் தெல்லிப்பளை | யில் உள்ள மாவை சேனாதி ராஜாவின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இரண்டு தேர்தல் பிரசாரங்களில் பங்கேற்பதாக நேற்று யாழ்ப்பாணம் வந்திருந்த வேளையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இல்லத்திற்கு வருகை தந்த ஜனாதிபதியை மாவை சேனாதி ராஜா, இந்து சமய முறைப்படி வரவேற்றார்.