வெலிக்கடை மற்றும் மகசீன் சிறைகளுக்கு வியாழக்கிழமை (11) விஜயம் செய்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளை நேரில் பர்வையிட்டு கலந்துரையாடியுள்ளார்.
இதுதொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,
வெலிக்கடை மற்றும் மகசீன் சிறைச்சாலையில் உள்ள 9 தமிழ் அரசியல் கைதிகளை நேரில் சந்தித்தேன். வெலிக்கடையில் தங்கவேலு நிமலன் (47)ஜோ.கொ.வலன்ரினோ (41) மகசீன் சிறையில் ஆனந்தவர்ணன் (அரவிந்தன்) கடந்த மார்ச் 26இல் கைது) மகசீன் சிறையில் 15 - 29 வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆனந்த சுதாகரன் ஆகியோரைப் பார்வையிட்டேன்.
அவர்களுடைய விடுதலை சம்பந்தமாக எந்தவொரு நடவடிக்கைகளும் அக்கறையுடன் முன்னெடுக்கப்படவில்லை என்ற கவலை அவர்களுக்கு அதிகமாக உள்ளது. எம்மைப் பொறுத்த வரையில் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும். அதன்கீழ் கைது செய்யப்பட்டுள்ள அனைவரும்
எம்மைப் பொறுத்த வரையில் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும். அதன்கீழ் கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும்.
ஆனந்த வர்ணன் வழக்கினை முன்னெடுக்க முடியாத நிலைமையில் உள்ளார். அவர் வேண்டுமென்றே தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவர் உள்ளிட்டவர்களின் விடுதலைக்காக அனைவரும் குரல்கொடுக்க வேண்டும் என்றார்.