சென்னையில் இருந்து காங்கேசன்துறை வந்த சொகுசுக் கப்பல்

5 months ago


இந்தியா, சென்னையில் இருந்து பயணிகள் சுற்றுலா சொகுசுக் கப்பல் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை (19) காலை ஆறு மணியளவில் காங்கேசன்துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

800க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றியவாறு குறித்த கப்பலானது யாழ்ப்பாணம் காங்கேசன் துறைமுகத்தை வந்தடைந்தது.

குறித்த கப்பலானது நேற்று முன்தினம் இலங்கை - ஹம்பாந்தோட்டையை வந்தடைந்தது. அங்கிருந்து பயணத்தை ஆரம்பித்து நேற்றையதினம் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது. இந்நிலையில் இன்றையதினம் யாழ்ப்பாணம் - காங்கேசன் துறைமுகத்தை வந்தடைந்தது.

குறித்த கப்பலானது இன்று பிற்பகல் மீண்டும் இந்தியாவை நோக்கி பயணித்தை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மைய பதிவுகள்