எம்.பி இராமநாதன் அர்ச்சுனா சிறப்புரிமை குற்றச்சாட்டு நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு சபாநாயகருக்கே -- சபை முதல்வர் தெரிவிப்பு
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சிறப்புரிமை தொடர்பில் முன்வைத்த குற்றச்சாட்டு நடவடிக்கை எடுப்பதற்கான பொறுப்பு சபாநாயகருக்கே உள்ளதாகச் சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
அவருக்கு நேரம் ஒதுக்கப்படாமை மிகவும் ஜனநாயக விரோத செயல் எனவும் அதற்கு ஆளும் தரப்பு அதற்குப் பொறுப்பல்ல. அவருக்கு எதிர்க்கட்சித் தலைவரே பேசுவதற்கு நேரம் ஒதுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
எனவே, அவருக்கு நேரம் ஒதுக்கப்படாதமையினால் பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கும் இடையூறு ஏற்படுகிறது எனவும் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
தமது பாராளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாகத் தாம் முறைப்பாடு செய்துள்ள போதிலும் அது தொடர்பில் விசாரிக்கப்பட இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.
தமக்கு உரையாற்றுவதற்கு அரசாங்க தரப்பு நேரம் ஒதுக்கவில்லை என்றும் தமது முறைப்பாடு தொடர்பில் விசாரிப்பதில் காலதாமதம் ஏற்படுத்தி வருவதாக அவர் கூறினார்.
உடனடியாக இந்தப் பிரச்னைக்குத் தீர்வு வழங்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோரியுள்ளார்.
அதனையடுத்து, பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, இந்த விடயம் பாராளுமன்றத்தின் சிறப்புரிமை பற்றிய குழுவின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும் எனக் குறிப்பிட்டார்.