இலங்கையில் குற்றச் செயல்களுடன் நேரடியாக தொடர்புடைய 249 பேரும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 4,020 பேரும் கைது

2 months ago



நாடளாவிய ரீதியாக முன்னெடுக்கப்படுகின்ற குற்றத் தடுப்பு விசேட சோதனை நடவடிக்கைகளில், குற்றச் செயல்களுடன் நேரடியாக தொடர்புடைய 249 பேரும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 4,020 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துரைத்த பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ்

அத்தியட்சகர் புத்திக மனதுங்க இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கடந்த நாள்களில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேநேரம் 3- டி56 ரக துப்பாக்கிகளும் 5 கைத்துப்பாக்கிகளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.