முல்லைத்தீவில் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் அரச உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

3 months ago

முல்லைத்தீவில் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் அரச உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் பணியாற்றும் நபரே நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

விசுவமடு கிழக்கைச் சேர்ந்த 33 வயதான நபர்மீது சிறுமி அளித்த முறைப்பாட்டை அடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸார் சந்தேகநபரை கைது செய்தனர்.

சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அண்மைய பதிவுகள்