இத்தாலியின் சிசிலியில் கடலில் மூழ்கிய ஆடம்பர படகின் சிதைவுகளில் இருந்து ஐந்து உடல்களை சுழியோடிகள் மீட்டுள்ளனர்.

4 months ago


இத்தாலியின் சிசிலியில் கடலில் மூழ்கிய ஆடம்பர படகின் சிதைவுகளில் இருந்து ஐந்து உடல்களை சுழியோடிகள் மீட்டுள்ளனர்.

ஆடம்பர படகின் சிதைவுகளை தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட சுழியோடிகள் காணாமல்போன ஆறுபேரில் ஐவரின் உடல்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.

பெயேசியனின் சிதைவுகளில் இருந்து மீட்கப்பட்ட உடல்களை இத்தாலிய கடற்படையினர் இன்னமும் அடையாளம் காணவில்லை.

படகு கவிழ்ந்ததை தொடர்ந்து பிரிட்டனை சேர்ந்த நால்வரையும் அமெரிக்காவை சேர்ந்த இருவரையும் சுழியோடிகள் தேடிவருகின்றனர்.

காணாமல்போனவர்களில் பிரிட்டனின் செல்வந்தரும் அவரது மகளும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. விபத்துக்குள்ளான படகு அவரது மனைவிக்கு சொந்தமானது.

முதலில் புதன்கிழமை மதியம் இரண்டு உடல்கள் போர்ட்டிசெலோ துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டதாகவும்பின்னர் இரண்டு உடல்கள் மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


அண்மைய பதிவுகள்