பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கொழும்பு தாமரை கோபுரத்தை இயக்கும் நேரத்தை நீடிக்க அதன் நிர்வாகம் முடிவு

2 weeks ago



பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கொழும்பு தாமரை கோபுரத்தை இயக்கும் நேரத்தை நீடிக்க அதன் நிர்வாகம் முடிவு செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டிகைக் காலத்துக்கான நீட்டிக்கப்பட்ட இயக்க நேரத்தையும் அறிவித்துள்ளது.

அதன்படி, தாமரை கோபுரம் டிசெம்பர் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் காலை 9 மணி முதல் நள்ளிரவு வரை பொது மக்கள் பார்வைக்காகத் திறந்து வைக்கப்படும் எனவும் டிசெம்பர் 27 ஆம் திகதி காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசெம்பர் 31 மற்றும் ஜனவரி முதலாம் திகதியன்று காலை 9 மணி முதல் ஜனவரி 2 ஆம் திகதி மதியம் ஒரு மணி வரை திறந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைய பதிவுகள்