யாழ்.மாவட்டம் வாக்காளர் எண்ணிக்கையில் பின் தங்கியுள்ளது.

4 months ago



2019 ஆம் ஆண்டு நடை பெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் பெயர்ப்பட்டியலுடன் ஒப் பிடுகையில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் வாக்காளர் அதிகரிப்பு வீதம் ஏனைய மாவட்டங்களை விட குறைவாகவே காணப்படுகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்காளர் அதிகரிப்பு வீதம் ஏனைய மாவட்டங்களை விட அதிகமாக காணப்படுகிறது.

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் வாக்காளர் அதிகரிப்பு வீதம் 5.04 வீத மாகவும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 12.9 சதவீதமாகவுள்ளது.

வாக்காளர் அதிகரிப்பு வீதம் குறைந்த மாவட்டமாக கேகாலை மாவட்டம் 4.9 வீதத்துடன் காணப்படுகிறது.

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம் கடைசிக்கு முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.




அண்மைய பதிவுகள்